என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
1.
விண் துாதர் போற்றிடும் உம் – பிதாவையும்
விட்டிறங்கி வந்தரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தரையா!
மானிடர் மேல் அன்பினால் – என்ன
2.
ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய் – என்ன
3.
தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினரே – என்ன
4.
தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றரே – என்ன
5.
பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
புரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே – என்ன
6.
இன்பம் எனக்கினியேன் – என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால் – என்ன
enna thiyakam, en, kalvari nayaka!
ennaiyum ummaippol marridavo!
1.
vin thudhar porridum um – bithavaiyum
viddirangki vanthdhare!
madduk koddilo vanjsithdharaiya!
manidar mel anbinal – enna
2.
janithdha nal mudhalay – kalvariyil
jeevanai iiyum varai
badukal um pangkayk kandiraiya!
paviyai meedpadharkay – enna
3.
dhalaiyais sayththitavo – umakku oor
dhalamo engkumillai
um adissuvaddil nan sellavo!
mun pathai kaddinare – enna
4.
thay thanththai veedum nadum – innum
dhanakkullathellam veruththu
anuthinam kurusai sumabpavarallo!
apposadhalar endrare – enna
5.
padukalallo ummai – makimaiyil
puranamays serthdhathe
ummodu nanum padu sakibben!
en jeevanaiyum vaiththe – enna
6.
inpam enakkiniyen – en arumai
iyesuthan en pangkallo!
nesarin pinne pokaththuninththen
pssam ennil vaithdhathal – enna